முஸ்லிம்களின் கோவிட் - 19 கையேடு.

TAMIL
முஸ்லிம்களின் கோவிட் - 19 கையேடு.

கோவிட் 19 நோய் தொற்றை கையாளும் முறை தொடர்பான ஓர் இஸ்லாமிய வழிகாட்டி.


மூத்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டலில்

வெளியிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையவனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனுடைய உதவி, அருள் மற்றும் வழிகாட்டுதல்களை நாம் வேண்டி நிற்கிறோம். தூதர் முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக,

அவர்களது தகுதியை உயர்த்துவானாக, அவர்களுக்கு மதிப்பளிப்பானாக, மேலும் அவர்களைப் பாதுகாப்பானாக.


தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் வேகமாக பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக பாதிப்படையச்செய்துள்ளது. இதில் முஸ்லிம் சமூகமும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த கையேட்டை எழுதுவதன் மூலம், சரியான இஸ்லாமிய கொள்கை ​​மற்றும் அறிவின் அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டல்களை வழங்கி, அல்லாஹ்வின் அருளைக்கொண்டு நம் சமூகத்திற்கு நம்பிக்கையைக் கொண்டுவர விரும்புகிறோம்.


இந்த கையேட்டை எழுதுவதன் நோக்கங்கள்:

  • இந்த நேரத்தில் நமது ஈமானையும் அல்லாஹ்வுடனான நமது ஆன்மீக தொடர்பையும் பலப்படுத்துதல்.

  • நமக்கும் நம் அன்புக்குறியவர்களுக்கும் நிகழக் கூடிய எல்லா நிகழ்வுகளையும் சிறந்த முறையில் எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பதை உறுதிசெய்தல்.


இந்த நேரத்தை அல்லாஹ்வுடன் நெருக்கமாகும் தருனமாக மாற்றுவானாக. நம்மையும், நம்முடைய அன்புக்குரியவர்களையும், சமூகத்தையும்

அல்லாஹ் அனைத்து விதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பானாக. இறுதியாக நாம், காலம்சென்ற அனைவரையும் மன்னித்து அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி அவனிடம் வேண்டுகிறோம்